2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

மரக்கன்றுகள் நடும் தேசிய வேலைத்திட்டம்

Thipaan   / 2015 மார்ச் 17 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

இன்று நாம் பயிரிடுவோம் நாளை பயன்பெறுவோம் எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி தமிழ் சிங்கள புத்தாண்டு சுபவேளையில் சகலபாடசாலை மாணவர்களும் நான்கு மில்லியன் மரக்கன்றுகளை நடும் தேசிய வேலைத்திட்டமொன்றினை இவ்வருடம் செயற்படுத்தவுள்ளதாக கல்விஅமைச்சு அறிவித்துள்ளது.

புத்தாண்டு சுபவேளையில் கடமைகளை ஆரம்பிக்கும் போது பயன்மிக்க மரக்கன்றுகளை மாணவர்கள் நடவேண்டும் என்று ஈடி 01. 102. 96 ஆம் இலக்க சுற்றுநிருபத்தின் மூலம் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தேசிமரம், புளியமரம், வகுப்புமட்டத்தில் நாற்றுமேடை தயாரித்து உற்பத்தி செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அம்மரக் கன்றுகளை 2015 ஏப்ரல் மாத பாடசாலை விடுமுறைக்கு முன்னர் மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நடப்படம் மரக்கன்றுகளை பார்த்தல், பராமரித்தல், தாம் நடும் மரக்கன்றுகள் தொடர்பாக சகல மாணவர்களினதும் அறிக்கைகளைப் பேனுவது அதிபர்களின் கடமையாகும்.

ஏனவே இவ்வேலைத்திட்டத்தினை வெற்றிகரமாக செயற்படுத்துமாறு சகல பாடசாலை அதிபர்களும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X