Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 மார்ச் 17 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
கல்முனை நகரில் 1979- 1983 வரையான காலப்பகுதியில் இயங்கி வந்த புகையிரத ஆசனப்பதிவு நிலையத்தினை மீண்டும் கல்முனை நகரில் திறக்குமாறு கோரி, சாய்ந்தமருது சுபீட்சம் சமூக நற்பணி மன்றத்தினால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மகஜர் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுபீட்சம் சமூக நற்பணி மன்றத்தின் தலைவர் எம்.ஐ.எம்.அன்சார், இன்று (17) செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
அதன்; தலைவர் எம்.ஐ.எம்.அன்சார், செயலாளர் ஏ.ஆர்.அஷ்பாக் அஹமட் ஆகியோர் கையொப்பமிட்டு அனுப்பியுள்ள அம்மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அம்பாறை மாவட்டத்தில் வாழும் அதிகமான மக்கள் நாள் தோறும் மட்டக்களப்பிலிருந்து பல்வேறு இடங்களுக்கு புகையிரதத்தில் பயணங்களை மேற்கொள்கின்றனர்.
தற்போது புகையிரத ஆசனப்பதிவுகள் மொபிடல் ஊடாக நாடு பூராகவும் நவீன தொழிநுட்ப முறையில் கணினி மூலம் (ழுடெiநெ ளலளவநஅ) செய்யப்படுகின்றன.
பிரயாணம் செய்யும் திகதியிலிருந்து 44 நாட்களுக்கு முன்னர், பிரயாணம் சென்று வருவதற்கான ஆசனப் பதிவுகளை ஒரே தடவையில் ஒரே நிலையத்திலேயே செய்து கொள்ளமுடியுமாக இருப்பதுடன், ஆசனப்பதிவுகளை இரத்துச் செய்யவோ அல்லது பிரயாணத் திகதியில் மாற்றீடு செய்யவோ வேண்டுமாயின் உரிய புகையிரதம் புறப்படும் நேரத்திலிருந்து 6 மணித்தியாலத்துக்கு முன்னர் சென்று அச்சேவையினை பெற்றுக்கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளமை ஒரு சிறப்பான விடயமாகும்.
கல்முனை நகரை அண்டியுள்ள அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஒலுவில், நிந்தவூர், சம்மாந்துறை, காரைதீவு, சாய்ந்தமருது. அம்பாறை, நற்பிட்டிமுனை, மத்திய முகாம், பாண்டிருப்பு, மருதமுனை ஆகிய பிரதேசங்களும் அதேபோல் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள களுவாஞ்சிக்குடி, கல்லாறு, நீலாவணை போன்ற பிரதேசங்களும் கல்முனை நகரினை அண்மித்த பிரதேசங்களாகும்.
மேற்படி பிரதேச மக்கள் புகையிரத ஆசனப்பதிவுகளை செய்து கொள்வதற்காக மிகவும் சிரமத்துக்கு மத்தியில் சுமார் 30,40,50,60 கிலோமீற்றர் தூரம் பயணித்து மட்டக்களப்பு புகையிரத நிலையத்துக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் பெரும் சிரமங்களை பிரயாணிகள் எதிர் கொண்டு வருகின்றனர்.
தற்போது அமைதியான சூழ்நிலையில் புகையிரத சேவையும் சிறப்பாக நடைபெறுகின்றது.
ஆகவே கடந்தகால அசாதாரண நிலைமை காரணமாக ஸ்தம்பிதமடைந்த புகையிரத ஆசனப்பதிவு நிலையத்தினை இப்பிரதேச மக்களின் நன்மை கருதி மீண்டும் கல்முனை நகரில் திறப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு அம்மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago