Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 மார்ச் 17 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஐ.ஏ.ஸிறாஜ்
அம்பாறை கல்லோயா வலது கரை அக்கரைப்பற்று திட்டமுகாமையாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் 2015ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற்செய்கைக்கான ஆரம்பக்கூட்டம் செவ்வாய்க்கிழமை (17) மாலை, அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அம்பாறை மாவட்ட விவசாயப் பிரதிப்; பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீஸ், மாவட்ட நீர்ப்பாசன பணிப்பாளர் நிஹால் சிறிவர்த்தன, அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ், அக்கரைப்பற்று வதிவிட திட்ட முகாமையாளர் எம்.எம்.நழீம், பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் திரு மயூரன், உட்பட விவசாய திணைக்கள அதிகாரிகள், நீர்ப்பாசனத் திணைக்கள அலுவலக உத்தியோகஸ்தர்கள், உர மற்றும் விதை நெல் களஞ்சியசாலை அதிகாரிகள், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் 2015ஆம் ஆண்டு சிறுபோகத்துக்கான விதைப்புக் காலமான 01.04.2015 தொடக்கம் 21.04.2015 வரையான காலப்பகுதிக்குள் விவசாயிகள் தங்களது விதைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இதன்போது கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
1 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago