2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

'கல்விச் சமூகம் அர்ப்பணிப்புடனும் விடாமுயற்சியுடனும் பாடுபட வேண்டும்'

Thipaan   / 2015 மார்ச் 18 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

கல்வியின் மூலமே ஒரு சமூகம் மேன்மை அடைகின்றது. இதற்காக கல்விச் சமூகம் அர்ப்பணிப்புடனும் விடாமுயற்சியுடனும் பாடுபட வேண்டும். அப்போதுதான் சவால்களை எதிர்கொண்டு குறித்த இலக்கை அடையமுடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் தெரிவித்தார்.

இறக்காமம் கல்விக் கோட்டத்துக்குட்பட்ட குடுவில் அல்-ஹிறா வித்தியாலயத்தில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த முதல் மாணவியை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஒரு பாடசாலையை அதிபரினால் மட்டும் திறன்பட செயற்படுத்த முடியாது. ஓவ்வொரு பாடசாலையினதும் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உளிட்ட கல்விச் சமூகத்தின் கூட்டுப் பொறுப்புடனான செயற்பாடே அந்தப் பாடசாலையின் சாதனைகளுக்கும் உயர்வுக்கும் அத்திபாரமாக அமைகின்றது.

கஷ்டப்பிரதேச பாடசாலைகளின் பௌதிகவளங்கள் மற்றும் ஆசிரியர் பற்றாக்குறைகளை அரசாங்கம் தற்போது நிவர்த்தி செய்து வருகின்றது. மேலும் இப்பாடசாலைகளின் தேவைகள், பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்வதற்கு அனைவரும் முன்வர வேண்டும்.

இப்பாடசாலையின் வரலாற்றில் முதற்தடவையாக தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த இந்த சாதனை மாணவியை முன்மாதிரியாகக் கொண்டு ஏனைய மாணவர்கள் செயற்படவேண்டும்.

அதேவேளை, எதிர்காலத்தில் இன்னும் பல சாதனை மாணவர்கள் உருவாகுவதற்கு கல்விச் சமூகமும் அர்ப்பணிப்புடன் பாடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில், அதிதிகளின் உரையும் மாணவர்களின் கலை, கலாசார நிகழ்வுகளும் மேடையேற்றப்பட்டன.

பாடசாலை அதிபர் எம்.ஏ.எம். பஜீர் தலைiயில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் இறக்காமம் பிரதேச சபையின் தவிசாளர் யூ.கே.ஜபீர் மௌலவி, இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X