2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

உற்பத்தித்திறன் மேம்படுத்தல் சம்பந்தமான செயலமர்வு

Thipaan   / 2015 மார்ச் 18 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.ஏ. தாஜகான்

பொத்துவில் உபவலய பாடசாலை ஆசிரியர்களுக்கான  உற்பத்தித்திறன் மேம்படுத்தல் சம்பந்தமான செயலமர்வு பொத்துவில் அல் பஹ்ரியா வித்தியாலயத்தில் இன்று(18) இடம்பெற்றது.

பாடசாலை மட்டத்தில் உற்பத்தி திறன் மேம்பாட்டினை ஏற்படுத்தும் முகமாகவே இச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பொத்துவில் பிரதேச செயலகம் மற்றும் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம்.ஜௌபரின் இணைப்பில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.முசர்ரத், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.தமீம், அல் பஹ்ரியா வித்தியாலயத்தின் அதிபர் கே.ஹம்சா மற்றும் உற்பத்தி திறன் அமைச்சின் உத்தியோகத்தர்கள ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

வளவாளர்களாக பிரகாஸ்ராஜ், ரமணன் ஆகியோர் கலந்து கொண்டு உற்பத்தி திறன் அபிவிருத்தி சம்பந்தமான விளக்கத்தை அளித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X