2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

விசேட தேவையுடைய மாணவர்களுக்கு போக்குவரத்து கொடுப்பனவு வழங்க நடவடிக்கை

Princiya Dixci   / 2015 மார்ச் 18 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

2015ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்ட மும்மொழிவுக்கமைய பாடசாலைகளில் கல்வி பயிலும் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு சமூக சேவைகள் திணைக்களத்தால் போக்குவரத்துக் கொடுப்பனவு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகஸ்தர் எம்.ஐ.எம்.அன்வர், புதன்கிழமை (18) தெரிவித்தார்.

சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய வலயக் கல்வி பணிப்பாளர்கள், கோட்டக் கல்வி பணிப்பாளர்கள் பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் கிராம சேவகர்கள் ஊடாகவும் பாடசாலைகளில் கல்வி பயிலும் விசேட தேவையுடைய மாணவர்களின் விவரங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் சமூக சேவை உத்தியோகஸ்தர் எம்.ஐ.எம்.அன்வர் தெரிவித்தார்.

வரவு - செலவுத்திட்ட மும்மொழிக்கமைய விசேட தேவையுடைய மாணவர்களுக்கு மாதாந்தம் 750 ரூபாய் வழங்கப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X