2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

ஒரு கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்

Sudharshini   / 2015 மார்ச் 21 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அபிவிருத்தி அமைச்சினால், 100 நாட்கள் விஷேட அபிவிருத்தி திட்டத்துடன் இணைந்ததாக கிராமங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் பிரதேசத்தில் ஒரு கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்தை மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (20) ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலத்தில் நடைபெற்றது.

கிராமப் பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் மற்றும் வறுமையை இல்லாதொழிப்பதற்காக வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் போன்றவை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இவ்வேலைத்திட்டத்துக்காக ஒரு கிராமத்துக்கு 01 மில்லியன் ரூபாய் வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
இந்நிதி மூலம் பொது உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல், சிறு நீர்ப்பாசன அபிவிருத்தி, கிராமப் புற அபிவிருத்தி போன்ற வேலைத் திட்டத்துக்கு முன் உரிமை கொடுக்கப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் 100 நாட்கள் நிகழ்ச்சி திட்டத்தில் 36, 822 கிராமங்கள் அபிவிருத்தி செய்யவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அட்டாளைச்சேனை பிரதேச சபை உதவித் விசாளர் ஏ.எல். அமானுல்லா தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், கிரம சேவகர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், சமய தலைவர்கள், பாடசாலைகளின் அதிபர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X