2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

மு.கா.வின் அட்டாளைச்சேனை கிளைக்குழுத் தெரிவு

George   / 2015 மார்ச் 21 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில் 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை 08 ஆம் பிரிவின் கிளைக்குழுத் தெரிவு, சனிக்கிழமை (21) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோணாவத்தை காரியாலயத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளருமான ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொதுப் பணிகள் அமைப்பின் தலைவருமான எஸ்.எல்.முனாஸ், முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக செயலாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.ஏ.கபூர், மு.கா.வின் உயர்பீட உறுப்பினர் யு.எல்.வாஹிட், முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் அப்துல் லத்திப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது அட்டாளைச்சேனை – 08ஆம் பிரிவுக்கு செயலாளராக தெரிவு செய்யப்பட்ட ஏ.ஏல்.தௌபீகிடம் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளருமான ஏ.எல்.எம்.நஸீர் உரிய ஆவணங்களை கையளித்து வைத்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X