2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

டெங்கு நுளம்புகள் இல்லாத கிழக்கு மாகாணம் எனும் தொனிப்பொருளில் செயலமர்வு

Sudharshini   / 2015 மார்ச் 21 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு 'டெங்கு நுளம்புகள் இல்லாத கிழக்கு மாகாணத்தைக் கட்டியெழுப்புவோம்' எனும் தொனிப்பொருளில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் தலைமையில் நடைபெற்ற செயலமர்வு  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் வியாழக்கிழமை (19) நடைபெற்றது.

இச்செயலமர்வில், டெங்கு இல்லாத கிழக்கு மாகாணத்தை உருவாக்கி முன்மாதிரியான தேசமாகத் திகழ்வதுக்கு வகுக்கப்பட்டுள்ள வேலைத் திட்டங்கள் தொடர்பில் தெளிவூட்டப்பட்டன.

மேலும், மக்கள் மத்தியல் சுகாதாரமான உணவுப் பழக்கவழக்கத்தை ஏற்படுத்துவதுக்கான திட்டங்களை எவ்வாறு செயற்படுத்தலாம் என்றும் கலந்தாலோசிக்கப்பட்டன.

இச்செயலமர்வில்,  மாகாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கே.முருகானந்தன், கல்முனை பதில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.இஸ்ஸதீன், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ்.சதுர்முகம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X