2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

மத்திய குழு புனரமைப்பு

Princiya Dixci   / 2015 மார்ச் 23 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

தேசிய காங்கிரஸ் கட்சியின் பொத்துவில் பிரதேசத்துக்கான மத்திய குழு புனரமைப்பு பொத்துவில் சண்டி பீச் ஹோட்டலில் சனிக்கிழமை (21) நடைபெற்றது.

தேசிய காங்கிரஸின் பொத்துவில் பிரதேச அமைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான ஏ.பதுர்காண் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

இதன் போது கிராம சேவகர் மட்டத்தில் அமைக்கப்பட்ட கிளைக் குழுக்களின் நிருவாக உறுப்பினர்களிலிருந்து மத்திய குழுவுக்கான நிருவாகிகள் தெரிவு செய்யப்பட்டனர்.

பொத்துவில் பிரதேச இளைஞர் அமைப்பொன்றை அமைப்பதற்கான நடவடிக்கையை எதிர்காலத்தில் மேற்கொள்வதற்கான ஆலோசனையும் இதன் போது மேற்கொள்ளப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவின் இணைப்புச் செயலாளர் சட்டத்தரணி எம்.எம்.பஹ்ஜி மற்றும் கட்சியின் தேசிய பிரதி அமைப்பாளர் யூ.எல்.உவைஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X