Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 மார்ச் 23 , மு.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கனகராசா சரவணன்
அமைதியைத்தேடி நீதிமன்றத்துக்கு ஆலயங்களும் செல்லுமளவுக்கு ஆலய பரிபாலனசபைகள் காணப்படுகின்றன. இதனால் மதத்தின் மீதும் ஆலயங்கள் மீதும் வெறுப்பை ஏற்படுத்துகின்ற அளவுக்கு ஆலயங்கள் உள்ளன என அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் தெரிவித்தார்.
அமைதியைத் தேடி ஆலயங்களுக்குச் செல்கின்றோம் ஆனால், இன்று பல ஆலயங்கள் அமைதியற்ற நிலையில் உள்ளன என தெரிவித்தார்.
அம்பாறை, திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் முன்றலில் விஸ்வலிங்கம் கனகலிங்கம் அனுசரனையுடன் யாத்திரிகர் தங்குமிட கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஆலய பரிபாலன சபை தலைவர் சு.சுரேஸ் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஆலயங்களின் உள்ளே தெய்வங்கள் எதற்காக இருக்கின்றன என்பதையெல்லாம் மறந்து சுயநலத்துக்காகவும் அல்லது தாங்கள் யார் என காண்பிக்கப்பட வேண்டும் என்ற நிலைக்கு ஆலயங்களில் குளறுபடிகள் இடம்பெறுகின்றன.
இதை எல்லாம் ஓர் ஒழுக்க கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என்பதற்காகவே, ஆலய நிர்வாகம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் எவ்வாறனவர்களை ஆலய பரிபாலன சபையில் உள்ளீர்க்கவேண்டும் மற்றும் ஆலயங்கள் செய்யவேண்டிய கடமைகள் தொடர்பாக இந்து கலாசார திணைக்களம் ஒரு நூலை வெளியிட்டுள்ளது.
ஆலங்களின் வருமானம், மக்கள் ஆலயங்களுக்கு வழங்கும் பொருட்கள், நன்கொடைகள் என மூன்று விதமாக நிதி வசூலிக்கப்படுகின்றது.
இந்நிதிகளை எவ்வாறு கையாளவேண்டும் என்பதில் குழப்பம் ஏற்படுகின்றது. உண்மையில், இவ் ஆலயம் ஒரு புகழ்பெற்ற ஆலயம். இவ்வாலயம் மேன்மேலும் வளரவேண்டும் என்றால் ஆலய பரிபாலன சபை சரியான முறையில் இயங்கவேண்டும்.
அதற்கு மக்கள் ஓத்துழைப்பு நல்கவேண்டும் அவ்வாறு இருந்தால் தான் ஆலயம் பிரபலமடையும் அவ்வாறு இல்லாவிட்டால் குளறுபடிகள் ஏற்படுமாயின் ஆலயம் கீழ் நோக்கி செல்லும்.
எனவே, ஆலய பரிபாலனசபைகள் வெளிப்படை தன்மையுடன் இருக்கவேண்டும். வந்த பணத்துக்கு என்ன செலவு என்ன நடந்தது என வெளிப்படைத் தன்மையாக இருந்தால் மாயமாக இருக்கின்ற விடயங்கள் தெளிவடையும். இதனால் ஆலய நிர்வாகத்துக்;கும் மக்களுக்குமிடையே இருக்கின்ற முரண்பாடுகளை குறைக்கமுடியும்
ஒரு ரூபாயை வழங்கிவிட்டு பெயர்வரவேண்டும் என சண்டைபிடிக்கின்ற இந்தகாலத்தில், சொந்த நிதியுமல்லாது அரசாங்கத்தின் பணத்தை வைத்துக் கொண்டு தன்னுடைய பெயர்பெறவேண்டும் என்ற பல அரசியல்வாதிகள் மத்தியில், இந்த ஆலயத்தின் மகிமையை அறிந்து வெளிநாட்டில் இருந்து கொண்டு இவ்வாறு ஒரு பாரிய நிதியை விஸ்வலிங்கம் கனகலிங்கம் வழங்கி கட்டடத்தை கட்டுவது நல்ல விடயமாகும்.
இந்த ஆலயம் ஒரு பெரிய வீதியைக் கொண்டது ஆனால், இங்கு நிழல் தரும் மரங்கள் அமைக்கப்பட வேண்டும் என ஒருவர் கூட சிந்திப்பதில்லை.
பெரிய வெளியாக உள்ளதால் வீதியை சுற்றி நிழல் தரும் மரங்கள் நடப்படவேண்டும். அத்தோடு ஆலய பரிபாலன சபை, ஆலயத்தின் வளர்ச்சிக்கான பங்காளிகளாக மாறவேண்டும் என்றாh.;
இவ் நிகழ்வில் அதிதிகளாக திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் வி.புவிராஜன், ஆலய வண்ணக்கர் வ.ஜெயந்தன் உட்பட பலர் கலந்து கொண்டு கட்டடத்துக்கான அடிக்கற்களை நாட்டிவைத்தனர்.
17 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago