2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

மு.கா.வின் மத்தியக்குழுக்கள் கிராம மட்டத்தில் மீளமைப்பு

Gavitha   / 2015 மார்ச் 23 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மத்திய குழுக்களை கிராம மட்டத்தில் மீளமைப்புச் செய்யும் நடவடிக்கை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், அம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனை மத்திய குழுவினரை அமைக்கும் நிகழ்வு, சனிக்கிழமை (21) கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளருமான ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் புதிய பிரதேச சபையின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு மு.கா.வின் உயர்பீட உறுப்பினர்களும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களுமான சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப், எம்.ஐ.எம்.பிர்தௌஸ் ஆகியோர் கலந்து கொண்டு மத்திய குழுத் தெரிவின் நடவடிக்கைகளை கண்காணிப்பு செய்தனர்.

மேலும், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எல்.முனாஸ், ஏ.எஸ்.எம்.உவைஸ், ஐ.எல்.நஸீர் மு.கா.வின் ஸ்தாபக செயலாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியமான எஸ்.எம்.ஏ.கபூர், யூ.எம்.வாஹிட், முன்னாள் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.சி.காதர், முன்னாள் உறுப்பினர் கே.எல்.கலீல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அட்டாளைச்சேனையிலுள்ள 17 கிராம சேவகர் பிரிவுகளில், 18 முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கிளைக்குழுத் தெரிவு கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளருமான ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் அமைக்கப்பட்டு வந்தமையும் இந்த கிளைக்குழுக்களில் முக்கிய பதவி வகிப்பவர்கள் இதில் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X