2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

கிராமிய பெண்களுக்கான செயற்திறன் அபிவிருத்தி பயிற்சி

Princiya Dixci   / 2015 மார்ச் 24 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

கிராமிய பெண்களின் செயற்திறனை அபிவிருத்தி செய்யும் வகையில் 06 நாட்களைக்கொண்ட செயலமர்வு திங்கட்கிழமை (23) தென்கிழக்குப் பல்கலைக்கழத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகமும் இந்திய திரிச்சிறாப்பள்ளி தேசிய தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து ஆசியான் மன்றத்தின் அனுசரணையுடன் இச்செயலமர்வு இடம்பெற்று வருகின்றது.

இந்திய மற்றும் இலங்கை கிராமியமட்ட பெண்களின் அனுபவங்களை பகிர்ந்து அவர்களின் செயற்திறனை அதிகரித்துக் கொள்வதற்காக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை அண்டிய கிராமியமட்டத்திலிருந்து 50 பெண்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில் வழிகாட்டல் பிரிவின் தலைவி எம்.ஏ.சீ.சல்பியாஉம்மா தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில் குறித்த செயற்திட்டத்தின் தந்தையான இந்திய திரிச்சிறாப்பள்ளி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் பேராசிரியர் கலாநிதி ஜீ.கண்ணபிரான், திட்டத்தின் செயற்பாடுகளை விளக்கிக்கூறினார்.

முயற்சியால் உயர்ந்து செல்லும் திருமதி எம்.எஸ்.விஜிதா மற்றும் திருமதி டி.ஜயந்தினி ஆகியோர் கௌரவிக்கப்பட்டதுடன் ஆசியன் மன்றத்தின் இலங்கைப் பிரதிநிதி எம்.ஐ.எம்.வலீத் நினைவுப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளர் மன்சூர் ஏ.கதர், ஆசியன் மன்றத்தின் இலங்கைப் பிரதிநிதியின் சார்பில் எம்.ஐ.எம்.வலீத், இந்திய பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறையின் தலைவர் பேராசிரியர் ந.மணிமேகலை மற்றும் வர்த்தக முகாமைத்துவ பிரிவின் பீடாதிபதி கலாநிதி சரீனா யு.எம்.ஏ.கபூர், வர்த்தக முகாமைத்துவ பிரிவின் பிரிவுத்தலைவர் கலாநிதி எஸ்.குணபாலன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X