2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

விழிப்புணர்வு கூட்டம்

Kogilavani   / 2015 மார்ச் 24 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

பெண்கள்,சிறுவர்கள் பாதுகாப்பு தொடர்பில் விளக்கமளிக்கும் விழிப்புணர்வு கூட்டம் திங்கட்கிழமை(23) அட்டாளைச்சேனை 15ஆம் பிரிவு சனசமூக நிலையத்தில் நடைபெற்றது.

இதன்போது, பெண்கள், சிறுவர்கள் பாதுகாப்பு, துஷ்பிரயோகம், சட்ட அணுகுமுறை மற்றும் நடைமுறை தொடர்பில் கிராம மட்டத்திலான பெண்கள் அமைப்புகளுக்கு விளக்கமளிக்கப்பட்டன.

இலங்கை சென்.ஜோன் அம்பியுலன்ஸின் அனுசரணையில், அட்டாளைச்சேனை பிரதேச சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரிவு இவ்விழிப்புணர்வு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

அட்டாளைச்சேனைப் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.எச்.ஏ.றிபாஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அட்டாளைச்சேனை உதவி பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ், அம்பாறை பிராந்திய சிறுவர் துஷ்பிரயோகப் பிரிவுக்கான பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.எம்.பாரீஸ் உள்ளிட்ட வளவாளர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு, துஷ்பிரயோகங்கள், சட்ட நடவடிக்கைகள், வீட்டு வன்முறைகள், குடும்ப முரண்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X