2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

'ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை, ஆலையடிவேம்பில் நடைபெறவுள்ளது'

Thipaan   / 2015 மார்ச் 24 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 08ஆம் திகதி புதன்கிழமை காலை 8.30 மணி முதல் பிற்பகல் 5.00 மணிவரை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது என பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தெரிவித்தார்.

ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, திருக்கோவில் மற்றும் காரைதீவு பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிக்கும் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் முறைப்பாடுகளையும் வாய்மூல சாட்சியங்களையும் பதிவுசெய்யும் பொதுசன அமர்வொன்றே அன்றைய தினம் நடைபெறவுள்ளதாக் வி.ஜெகதீசன் தெரிவித்தார்.

கடந்த மூன்று தசாப்தகால உள்நாட்டு அசாதாரண யுத்தச்சூழலில் காணாமற்போன தமது உறவுகள் பற்றிய முறைப்பாடுகளைப் பதிவு செய்யும் பொருட்டு, மேற்குறிப்பிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிக்கும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அனைவரும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்கு உரிய ஆவணங்களின் மூலப்பிரதிகள் மற்றும் போட்டோப்பிரதிகளுடன் தவறாது சமுகமளிக்குமாறு ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் அழைப்பு விடுத்துள்ளார்.

இதில், கடந்தகால யுத்தச்சூழலில் காணாமற்போனோர் தொடர்பாக நீதிமன்ற விசாரணைகள் நடத்தப்பட்டு நட்;டஈட்டினைப் பெற்றுக்கொண்டோர் மற்றும் மரணச்சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டோர் உள்ளிட்ட அனைவரும் தவறாது குறித்த பொதுசன அமர்வுக்கு சமுகமளிக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

அனைவரது முறைப்பாடுகளும் இங்கு முறையாகப் பதிவுசெய்யப்பட்டு நேரடி விசாரணைகள் நடாத்தப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இவ் இறுதிச் சந்தர்ப்பத்தைப் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் எவரும் தவறவிட்டுவிடவேண்டாம் எனவும் வினயமாகக் கேட்டுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை மறுநாள் (09 ஆம் திகதி), வியாழக்கிழமை காலை 8.30 மணி முதல் பிற்பகல் 5.00 மணிவரை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடாத்தப்படும்.

இதில், அக்கரைப்பற்று, நிந்தவூர் மற்றும் இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிக்கும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை பதிவு செய்யலாம் என பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X