2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

மொழிவிருத்தி ஆய்வு கூடம் திறந்து வைப்பு

Princiya Dixci   / 2015 மார்ச் 24 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

இந்தியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரிக்கான மொழிவிருத்தி ஆய்வு கூடத்தை இன்று செவ்வாய்க்கிழமை (24) திறந்து வைத்தார்.

இந்தியாவின் நன்கொடையில் சுமார் 10 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் இவ்வாய்வு கூடம் நிறுவப்பட்டுள்ளது.

தேசிய கல்வியற்கல்லூரியின் அதிபர் எம்.ஐ.எம்.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகர் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்பதிகாரி எஸ்.எல்.எம்.பழீல் மற்றும் பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா உள்ளிட்ட அதிதிகள் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பிரதம அதிதியினால் நினைவுப் படிகம் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டதுடன் கல்லூரி மாணவர்களின் கலை, கலாசார நிகழ்வுகளும் நடைபெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X