2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

தமிழ் மொழி தின போட்டிக்கான தெரிவு போட்டி

Thipaan   / 2015 மார்ச் 25 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

அகில இலங்கை தமிழ் மொழி தின போட்டியின் 2015ஆம் ஆண்டுக்கான  முதற்கட்ட பாடசாலை மட்ட தெரிவு போட்டிகள் அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் வித்தியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்றது.

அல்-அர்ஹம் வித்தியாலய அதிபர் எம்.ஏ.அன்சார் தலைமையில் நடைபெற்ற இப்போட்டிகளில், அதிகளவான மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டினர்.

போட்டிகளுக்குரிய நடுவராக கவிஞர் எம்.ஜெலீல் கடமையாற்றியதுடன் போட்டிகளுக்குரிய இணைப்பாளராக ஆசிரியர் எம்.எஸ்.எம்.பைறூஸ் செயற்பட்டார்.

இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் கோட்ட மட்ட போட்டிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X