Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2015 ஏப்ரல் 28 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
அம்பாறை, சம்மாந்துறை செந்நெல் கிராமம், இரண்டாம் பிரிவில் இருபது வீட்டுத் திட்டத்தில் 20 இலட்சம் ரூபாய் நிதியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய பள்ளிவாயல் செவ்வாய்க்கிழமை(28) திறந்து வைக்கப்பட்டது.
தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புலாஹ்விடம் விடுத்த வேண்டு கோளுக்கமைய ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் தனவந்தர் ஹசன் அஹமட் ஹசன் முஹம்மட்டினால் மஸ்ஜிதுல் சாலிஹீன் எனும் பெயரில் இப்பள்ளிவாயல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் தலைவர் எம்.வை.எம்.முஸ்தபா தலைமையில் நடைபெற்ற புதிய இந்நிகழ்வில், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் பிரதிநிதிகளான ஹசன் அஹமட் ஹசன் முஹம்மட், முஹம்மட் அஹமட் முஹம்மட் இஸ்பா அல்-பலசி, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் உட்பட சம்மாந்துறை உலமாசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago