Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2015 ஏப்ரல் 29 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.முஜாஹித், எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை மாவட்டத்தில் திண்மக் கழிவுகளைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் நவீன திட்டம் தொடர்பில் ரஷ்ய நாட்டை சேர்ந்த முதலீட்டாளர்கள், கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பரை சந்தித்து கலந்துரையாடினர்.
கல்முனை மாநகர முதல்வர் செயலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற இச்சந்திப்பில் ரஷ்யாவை சேர்ந்த முன்னணி முதலீட்டாளர்களான டெபியா ஒலாசன், பேராசிரியர் பெல் ஆகியோருடன் தென்கிழக்குப் பல்கலைக்கழக் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எம்.ரஷ்மி, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர், கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது அம்பாறை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களினால் அன்றாடம் சேகரிக்கப்படும் திண்மக் கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதற்கான உத்தேசம் திட்டம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இத்திட்டம் நடைமுறைக்கு வருமாயின் கல்முனை மாநகர சபை பிரதேசங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பெரும் பிரச்சினையாக இருந்து வருகின்ற திண்மக் கழிவகற்றல் நெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.
அத்துடன், மக்களுக்கு மிகக் குறைந்த செலவில் மின்சாரத்தை வழங்குவதற்கான வாய்ப்பும் கிடைக்கும் என முதல்வர் நிஸாம் காரியப்பர் சுட்டிக்காட்டினார்.
ஆகையினால், ரஷ்ய முதலீட்டாளர்களின் உத்தேச திட்டத்துக்கு கல்முனை மாநகர சபை முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என அவர்களிடம் முதல்வர் உறுதியளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
19 minute ago
26 minute ago