Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2015 மே 31 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா, ரீ.கே.றஹ்மத்துல்லா
அம்பாறை மாவட்ட மூவின சமூகங்களின் ஒற்றுமைக்காகவும் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காகவும் தமது பங்களிப்பை வழங்கிருந்த அல் இபாதா கலாசார அமைப்பின் செயற்பாடுகள் பாராட்டத்தக்கது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை, ஞாயிற்றுக்கிழமை (31) தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை அல் இபாதா கலாசார மன்ற உறுப்பினர்களின் வருடாந்த ஒன்று கூடல், தலைவர் அஷ்ஷெய்க் யூ.எல். நியாஸி தலைமையில் அட்டாளைச்சேனை லொயிட்ஸ் கூட்ட மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அத்துடன், 'ஒரு சமூகம் சார்ந்த அமைப்புகள் தாம் சார்ந்த சமூகத்துக்கு மட்டுமல்லாது ஏனைய சமூகங்களின் ஒற்றுமைக்காகவும் நலனுக்காகவும் பாடுபட வேண்டும். சமூகத்துக்கு எவ்வாறான நல்ல காரியங்களை செய்ய முடியுமோ அதனைச் செய்ய வேண்டும். எப்போதும் தீய செயற்பாடுகளுக்கு நாம் துணைபோகக் கூடாது' என்றும் அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் றமாழான் மாத ஹதீஸ் மஜ்லீஸ் நடத்துதல் மற்றும் இஸ்லாமிய போட்டி நிகழ்ச்சிகளை நடத்துதல் போன்ற தீர்மானங்கள் இதன்போது நிறைவேற்றப்பட்டன.
இந்த ஒன்று கூடலில் உலமாக்கள், கல்வியியலாளர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், இபாதா கலாசார மன்றத்தின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago