2025 ஜூலை 03, வியாழக்கிழமை

விபத்தில் படுகாயமடைந்தவர் உயிரிழப்பு

Administrator   / 2015 ஜூன் 01 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

அக்கரைப்பற்று -பொத்துவில் பிரதான வீதியில் தம்பட்டைப் பிரதேசத்தில் கடந்த 20ஆம் திகதி  இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த இருவரில் சின்னபனங்காட்டை பகுதியை சேர்ந்த வல்லிபுரம் சோதிநாயகம் (வயது 61) இன்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.

தம்பட்டைப் பகுதியிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளும் எதிரே வந்த சைக்கிளும்  மோதியது.

இந்த விபத்து இடம்பெற்ற தினத்தன்று சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்திருந்தார். இதில்  படுகாயமடைந்த ஏனைய இருவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையிலேயே மேற்படி நபர் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .