2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

அம்பாறையில் 22 யானைகள் இறந்துள்ளன

Suganthini Ratnam   / 2015 ஜூன் 02 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

இந்த வருடத்தின்; ஜனவரி மாதத்திலிருந்து  மே மாதம் வரையான காலப்பகுதியில் அம்பாறை மாவட்டத்தில் சுமார் 22 காட்டு யானைகள் இறந்துள்ளதாக  தம்பிலுவில் வனஜீவராசிகள் அலுவலகத்தின் அதிகாரி ஏ.ஏ.ஹலீம் தெரிவித்தார்.

திருக்கோவில் பிரதேசத்திலேயே  கூடுதலான யானைகள் இறந்துள்ளதாகவும் அவர் கூறினார். அந்த வகையில், கட்டுத்துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி  நான்;கு  யானைகளும் பொறிவெடிகளில் சிக்கி ஒன்பது  யானைகளும் நோய் வாய்ப்பட்டு  நான்கு  யானைகளும் விபத்தினால்  இரண்டு  யானைகளும் வயது முதிர்ந்து மூன்று  யானைகளும் இறந்துள்ளன.

செயற்கை சம்பவங்களினால் யானைகள் இறப்பதை தடுப்பதற்கு பொலிஸாருடன் இணைந்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.

அம்பாறை நகர், உகண, தமண, பாணமை, குலனுக, வட்டினாகல, பன்னல்கம தொடக்கம் சாகாமம் குளக்கட்டுவரையான 26 கிலோமீற்றர் தூரம் யானை தடுப்பு மின்சாரவேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.  

மேலும்,  இம்மாதம் 15ஆம் திகதி திருக்கோவில் பிரதேசத்தின் சாகாமம் குளக்கட்டிலிருந்து சங்கமன்கண்டிவரை சுமார் 45 கிலோமீற்றர் தூரம் யானை வேலிகள் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X