Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 ஜூன் 02 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
நாட்டில் என்ன நடக்கிறதென புரிந்துக்கொள்ள முடியாமல் இருக்கிறது. ஒரு பக்கம் நல்லாட்சி எனும் கோஷம் தூக்கிப் பிடிக்கப்படுகிறது. மறுபக்கம் நல்லாட்சிக்கான ஆரம்ப அறிகுறிகள் மறைந்து நாட்டில் மறுபடியும் இனவாதம் பேசப்படுகிறது என்று இன நல்லுறவு தொடர்பான தேசிய வேலைத் திட்டத்தின் தலைவர் அஷ்ஷெய்க் அப்துல் காதர் மசூர் மௌலானா தெரிவித்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை (02) அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாட்டில் முன்னெடுக்கப்படும் சில அசாதாரண நடவடிக்கைகளின் பின்னால், திட்டமிட்ட சக்திகள் இருக்க வேண்டும் என்று அரசு நினைத்தால், அவர்களின் முன் நகர்வை தடுக்க வேண்டும். இல்லையென்றால் இந்த அரசும் இரட்டை வேடம் போடுகிறது என மக்கள் அதிருப்திக் கொள்ளும் காலம் வெகு தூரமில்லை.
வில்பத்து விவகாரத்தில் முஸ்லிம்கள் பக்கத்தில் ஆதாரபூர்வமான நியாயங்கலிருந்தும் இந்த அரசாங்கம் அவற்றை கணக்கெடுக்காததால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அதுபோல பேருவளையில் நடைபெற்ற படுகொலைகள் மற்றும் பல கோடிப் பெறுமதியான சொத்துக்களை அழித்து முஸ்லிம்களை உள ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்திய இன வாதிகள் தற்போதும் நல்லாட்சியில் சுதந்திரமாய் உலாவிக் கொண்டிருக்கிறார்கள்.
நல்லாட்சியிலும் இனவாதம் தாராளமாக பேசப்படுகிறது. கைது செய்யப்பட்ட நாளே பிணையில் வரும் அளவுக்கு பொது பல சேனாவின் ஞானசார தேரருக்கு சட்டம் கருணை காட்டுகிறது. இதுவெல்லாம் உற்று நோக்குகின்ற போது நல்லாட்சி மீதான சந்தேகம் பொது மக்களுக்கு வலுப்பத்தை தவிர்க்க முடியாது.
எனவே, உடனடியாக இவ்வாறான சந்தேகங்கள் களையப்பட வேண்டும். நாட்டில் மறுபடியும் இனவாத கோடாரிக் காம்புகளும் புல்லுருவிகளும் புத்துயிர் பெற இந்த அரசாங்கம் துணை போகக் கூடாது.
எதிர்வரும் ரமழானில் எமது முஸ்லிம்கள் அச்சமின்றியும் சுதந்திரமான முறையிலும் தமது மார்க்க கடமைகளை முன்னெடுக்க இவ்வாரசு வழி சமித்துக் கொடுக்க வேண்டும். அதற்கான சமிஞ்சையாக பொரளை பள்ளிவாசல் மீது ததக்குதல் நடாத்திய சுத்திரதாரிகளை கைது செய்யமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவ்வறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
20 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago
2 hours ago