2025 ஜூலை 03, வியாழக்கிழமை

தொழிற் பயிற்சி நெறிகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

Kogilavani   / 2015 ஜூன் 02 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா  

அம்பாறை மாவட்டத்திலுள்ள தொழில் பயிற்சி நிலையங்களில் பயிற்சி நெறிகளை தொடர விரும்பும் இளைஞர் யுவதிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையின் கீழ் இயங்கிவரும் அம்பாறை மாவட்டத்திலுள்ள தொழில் பயிற்சி நிலையங்களில் 2015ம் ஆண்டின் இரண்டாம் அரை ஆண்டில் பயிற்சி நெறிகளை தொடர விரும்பும் இளைஞர், யுவதிகளிடமிருந்தே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் ரீ.வினோதராஜா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

பாடசாலையை விட்டு இடைவிலகிய, பல்கலைக்கழக அனுமதி கிடைக்காதவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

நிந்தவூர் மாவட்ட தொழிற் பயிற்சி நிலையம் மற்றும் பொத்துவில், அக்கறைப்பற்று, ஆலையடிவேம்பு, காரைதீவு, சம்மாந்துறை, மத்தியமுகாம், கல்முனை ஆகிய பிரதேசங்களிலுள்ள தொழில் பயிற்சி நிலையங்களில் நடத்தப்படவுள்ள 30ற்கு மேற்பட்ட பயிற்சி நெறிகளுக்கு பயிலுனர்கள் இணைத்துக் கௌ;ளப்படவுள்ளனர்.

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், வாகனத் திருத்துனர், வாயுச்சீராக்கி, குளிரூட்டி திருத்துனர், மின்னியளாளர், நீர்க் குழாய் பொருத்துனர், அலுமினியம் பொருத்துனர், ஒட்டுனர், மரக்கை வினைஞர், ஆடைத் தரைக் கட்டுப்பாட்டாளர், நிர்மாணக் கைவினைஞர், முச்சக்கர வண்டி திருத்துனர், சாரதி பயிற்சி, கணினி வன்பொருள் தொழில்நுட்பவியளாளர் போன்ற பயிற்சி நெறிகளுக்கு  விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரிகள் விண்ணப்பபடிவங்களை மாவட்ட தொழிற்பயிற்சி நிலையம், பிரதான வீதி, நிந்தவூர் என்ற முகவரிக்கோ அல்லது பிரதேச தொழிற் பயிற்சி நிலையங்களுக்கோ எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் தபாலில் அனுப்பி வைக்கலாம் அல்லது நேரடியாக ஒப்படைக்கலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .