2025 ஜூலை 02, புதன்கிழமை

புகைத்தலால் சுற்றாடலுக்கும் பாதிப்பு

Suganthini Ratnam   / 2015 ஜூன் 03 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

புகைத்தலினால்; சுகாதாரம் மட்டுமல்லாது, சுற்றாடலும் பாதிக்கப்படுகின்றது. இதன் சுகாதார செலவீனங்களுக்காக அரசாங்கம் அதிகளவிலான நிதியை  ஒதுக்கீடு செய்துவருகின்றது என அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்தார்.

சர்வதேச  புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு தினத்தையொட்டின  அட்டாளைச்சேனை பிரதேச செயலகமும்  அக்கரைப்பற்று பொலிஸ் நிலையமும் இணைந்து நடத்திய புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு ஊர்வலமும் விழிப்புணர்வுக்கூட்டமும் இன்று புதன்கிழமை  அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் முன்பாக இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் உரையாற்றிய அவர், 'இலங்கையில் புகைத்தலுக்கு எதிராக  பல சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டபோதிலும், அவற்றை முறையாக பின்பற்றுவதில்லை. முதலில் எமது பிரதேச செயலகப் பிரிவில் புகைத்தல் மற்றும் மது பாவனையை குறைப்பதற்காக அதிகாரிகள், மாணவர்கள், பொலிஸார் தீவிர முயற்சிகளை முன்னெடுக்கவேண்டும். இவ்வாறு ஒவ்வொரு பிரதேசமும் நடவடிக்கை மேற்கொள்ளுமாயின் முழு நாடுமே புகைத்தல், மதுப் பழக்கத்திலிருந்து விடுபடும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .