2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

அக்கரைப்பற்று பிராந்திய ஊழியர்களின் இடமாற்றம் விவகாரம் வாபஸ்

Suganthini Ratnam   / 2015 ஜூன் 05 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அக்கரைப்பற்று பிராந்திய நீர்வழங்கல் காரியாலத்துக்குட்பட்ட பிரதேசங்களில் கடமையாற்றி வந்த ஊழியர்கள் எட்டு பேருக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை தேசிய நீர்வழங்கல் அதிகார சபை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளதாக  ஸ்ரீலங்கா சுதந்திர சேவா சங்கம் நேற்று (04) தெரிவித்துள்ளது.

தேசிய நீர்வழங்கல் அதிகார சபையின் அக்கரைப்பற்றுக் காரியாலயத்தில் சேவையாற்றி வந்த 08 ஊழியர்கள் அரசியல் பழிவாங்கலுக்குட்பட்டு வெளிமாகாணங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்திருந்தனர்.
 
 இதனையடுத்து ஸ்ரீலங்கா சுதந்திர சேவா சங்கத்தினால்  இவ் இடமாற்றம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்விடமாற்றத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக தேசிய நீர்வழங்கல் அதிகார சபையின் சட்ட ஆலோசகரினால் உறுதியளிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X