Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Sudharshini / 2015 ஜூன் 06 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை மாவட்டத்திலுள்ள வயோதிபர்களுக்கான இரண்டாயிரம் ரூபாய் மாதாந்த உதவிக் கொடுப்பனவு கடந்த 2 மாதங்களாக வழங்கப்படவில்லையென முதியோர்கள் தெரிவிக்கின்றனர்.
எழுபது வயதுக்கு மேற்பட்ட வயோதிபர்களுக்கென தேசிய முதியோர் செயலாகத்தினால் வழங்கப்படும் இரண்டாயிரம் ரூபாய் உதவிக் கொடுப்பனவு ஒவ்வொரு மாதமும் 05ஆம் திகதி வழங்கப்பட்டு வந்தது.
அம்பாறை மாவட்டத்தில் ஒரு சில பிரதேச செயலகங்கள் ஊடாக கடந்த மே மாதத்திற்கான உதவிக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், கரையோரப் பிரதேசங்களிலுள்ள அநேகமான பிரதேசங்களுக்கு மே, ஜூன் மாதங்களுக்கான உதவிக் கொடுப்பனவு இதுவரை வழங்கப்படவில்லையென வயோதிபர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
வயோதிபர்களுக்கான உதவிக் கொடுப்பனவாக கடந்த அரசாங்கத்தில் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது.
இக்கொடுப்பனவு 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 2 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருந்தது.
இவ்வுதவிக் கொடுப்பனவை பெறும் வயோதிபர்கள் நாளாந்தம் தபாலகங்களுக்கு சென்று வருவதாகவும் இதனால் சிரமங்களை எதிர் கொள்வதாகவும் தெரிவிக்ப்படுகின்றது.
இவ்வுதவித்தொகை ஊடாக பிறரில் தங்கி வாழும் நாம், எமது அன்றாட செலவின் ஒரு பகுதியையேனும் நிறைவு செய்து வந்தோம். அவ் உதவிப் பணம் கடந்த 2 மாதங்களாக வழங்கப்படாதனால் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கி வருவதாகவும் முதியோர்கள் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
46 minute ago
49 minute ago
56 minute ago