Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 ஜூன் 08 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டபோதிலும், இராணுவ ஆட்சிக்குள்ளேயே தமிழ் மக்கள் வாழ்கின்றனர். ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் என நூறு நாள் வேலைத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தும், அது பூரணமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
அக்கரைப்பற்று ஸ்ரீவம்மியடிப்பிள்ளையார் ஆலய ஒன்றுகூடல் மண்டபத்தில் நேற்று (07) மாலை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'ஜனநாயக சூழலை உருவாக்கி இராணுவ சூழலை அகற்றி, இனப்பிரச்சினை, நிலப்பிரச்சினை உள்ளிட்ட விடயங்களுக்கு தீர்வு காணவேண்டும் எனும் நோக்கிலேயே எமது மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். இருந்தபோதிலும், அவற்றுக்கான முழுமையான தீர்வு இதுவரையில் எட்டப்படவில்லை.
மேலும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை, இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட காணிகளில் தமிழினம் இல்லாமல் மாற்றி அமைக்கப்படுகின்றது. அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவில்லை, காணமல் போனவர்களுக்கு விடையில்லை போன்ற பல பிரச்சினைகளுக்கு இதுவரையில் தீர்வு காணப்படவில்லை
யாழ்ப்பாணத்தில் போதைவஸ்து விற்பனை செய்யப்படும் 28 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 17 பாடசாலைகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. பாடசாலைக்கு அருகிலே மதுபானசாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை யாவும் எமது இளம் சமுதாயத்தை அழிக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் மாற்றப்படவேண்டும்'; என்றார்.
21 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
2 hours ago
2 hours ago