Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 ஜூன் 13 , மு.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
மூதூர் தளவைத்தியசாலையில் நீண்ட காலமாக நிலவிவரும் ஆளணி மற்றும் வளப்பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி கிழக்கு மாகாண சபையில் தனிநபர் பிரேரணையொன்றை தான் கொண்டுவரவுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை வெள்ளிக்கிழமை (12) தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கiயில்,
மூதூர் பிரதேச மக்கள் அப்பிரதேசத்தில் அமைந்துள்ள தள வைத்தியசாலையின் குறைபாடுகளையும் பிரச்சினைகளையம் தீர்த்து வைக்குமாறு தொடர்ச்சியாக பல போராட்டங்களை நடாத்தி வருகின்றனர்.
மூதூர் பிரதேச வரலாற்றில் மக்கள் அனைவரும் சேர்ந்து ஒற்றுமையாக குரல் கொடுக்கும் மூதூர் தள வைத்தியசாலையின் குறைபாடுகளை, மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்கள் ஒன்றிணைந்து அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் கிழக்கு மாகாண சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்குறிப்பிடப்பட்ட விடயம் தொடர்பில், தனிநபர் பிரேரணையை எதிர்வரும் 16,17ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபையின் அமர்வுகளின் போது சமர்ப்பிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago