2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் மெத்தா சமாஜ அமைப்பு இணைவு

Sudharshini   / 2015 ஜூன் 13 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.ஏ.ஸிறாஜ்

முன்னாள் பிரதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகரவுக்கு ஆதரவாக அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கடந்த காலங்களில் செயற்பட்ட மெத்தா சமாஜ அமைப்பினர், எதிர்வரும் காலங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் இணைந்து செயற்படத் தீர்மானித்துள்ளதாக அவ்வமைப்பின் முக்கியஸ்தர்களில் ஒருவரான ஏ.றியாஸ் வெள்ளிக்கிழமை (12) தெரிவித்தார்

மேற்படி அமைப்பினர் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுத்தீனுக்கும் கடந்த புதன்கிழமை (10) கொழும்பில் நடைபெற்ற கலந்தரையாடலின் போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, பரந்தன் இரசாயணக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி எஸ்.எல்.எம் றமீஸ், உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

எதிர்காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அரசியல் நடவடிக்கைகளிலும் கட்சியின் வளர்ச்சியிலும் தமது அமைப்பினர் தீவிரமாக ஈடுபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X