Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 ஜூன் 13 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.சுகிர்தகுமார்
தங்களது கோரிக்கை தொடர்பில் நியாயம் கிடைக்காதவிடத்து விரைவில் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்படும் என அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் சங்க நிருவாக உறுப்பினர் எம்.தீலிபன் கூட்டத்தின் குறிப்பிட்டார்.
ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (12) நடைபெற்ற பட்டதாரிகளின் ஒன்றுகூடலின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் பாராமுகமாக செயற்படுவதாக அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் அமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது. மேலும் தங்களது கோரிக்கை தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் ஆளுநரும் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்துவதுடன் சாடி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த பல மாதங்களாக அம்பாறை மாவட்ட தழிழ் பட்டதாரிகள், அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் மற்றும் சமூகசேவை உத்தியோகத்தர் உள்ளிட்ட நியமனம் தொடர்பில் தாங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக போராடி வருகின்றனர். அத்தோடு கிழக்கில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்வதிலும் தாங்கள் புறக்கணிப்படலாம் எனுவும் தெரிவித்தனர்.
ஆசிரியர் நியமனம் தொடர்பில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சா,; அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
இவை அனைத்துக்கும் தீர்வு காணக்கோரி கடந்த காலத்தில் உண்ணாவிரதப் போராட்டங்களையும் மேற்கொண்டோம்
இதனடிப்படையில் நியாயமான தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என முதலமைச்சரினால் உறுதிமொழி வழங்கப்பட்டதை அடுத்து, அனைத்து போராட்டங்களையும் கைவிட்ட நிலையில் எதுவித நடவடிக்கையும் இதுவரையில் கிழக்கு மாகாண சபையால் மேற்கொள்ளப்படவில்லை.
.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago