Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஜூன் 13 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
சர்வதேச சிறுவர் தொழிலுக்கு எதிரான தினத்தையொட்டி, மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தின் சிறுவர் குழுத் தலைவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாடு காரைதீவு பொது நூலகக் கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை (12) நடைபெற்றது.
நாவிதன்வெளி சிறுவர் குழுத் தலைவி செல்வி இராமநாதன் யளார்த்தனி தலைமையில் நடைபெற்ற இவ் ஊடக மாநாட்டில் கல்முனை, நாவிதன்வெளி, காரைதீவு, நிந்தவூர் பிரதேச சிறுவர் குழுக்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டில் கல்முனை ஸ்ரீ சுபத்திரா ராமய விஹாராதிபதி றன்முத்துகல சங்கரெத்தின தேனர், அம்பாறை மாவட்ட சிறுவர் நன்நடத்தை அதிகாரி ஏ.உதுமாலெவ்வை, சிரேஷ்ட ஊடகவியலாளர் வீ.ரி.சகாதேவராஜா, மனித அபிவிருத்;தி ஸ்தாபனததின் கிழக்கு மாகாண இணைப்பாளர் பி.சிறிகாந், இன்னும் பல சிரேஷ்ட ஊடகவியலாளர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.
இச்சிறுவர் ஊடகவியலாளர் மாநாட்டில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு துஷ்பிரயோகங்கள், அவர்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் சவால்கள், சிறுவர்களுக்கெதிரான பாலியல் துன்புறுத்தல்கள், இதற்கான காரணங்கள், சிறுவர்களின் கல்வி மறுக்கப்படும் சந்தர்ப்பங்கள் போன்ற பல்வேறு விடயங்கள் விலாவாரியாக எடுத்துரைக்கப்பட்டன.
இறுதியில் ' சிறுவர்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு உடனுக்குடன் அரசு தண்டணையை வழங்க வேண்டும். விசாரணை என்ற போர்வையில் காலம் தாழ்த்தப்படுவதால் குற்றவாளிகள் தப்பித்துக் கொள்வதற்கும், மேலும் வன்முறைகளில் ஈடுபடுவதற்கும் அவர்களுக்குச் சந்தர்ப்பம் ஏற்பட வாய்ப்புண்டு.
எனவே உடனுக்குடன் தண்டணை வழங்கப்பட வேண்டும்' என்ற கருத்து உரத்து உச்சரிக்கப்பட்டது. தழிழ், சிங்கள மொழிகளில் மாநாடு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago