Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஜூன் 13 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
அம்பாறை, திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் தேசிய போசாக்கு மாதத்தினை முன்னிட்டு சத்துணவு மற்றும் பாதுகாப்பான உணவு முறைகளை முன்னெடுத்தல் போன்ற நிகழ்வுகள் திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி ஏ.உதயசூரியா தலைமையில் இன்று சனிக்கிழமை(13) இடம்பெற்றன.
இதன்போது சுகாதார அமைச்சின் திட்டத்துக்கு அமைய 'அதிகபலம், ஆற்றல் மற்றும் உற்பத்தி திறனுக்கு ஆரோக்கியமான உணவுகள்' எனும் தொனிப் பொருளின் கீழ் பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலைகள் நடத்துவோர் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கும் நடத்தப்பட்டது.
இந் நிகழ்வில் சுகாதார வைத்திய அதிகாரி ஏ.உதயசூரியா, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் மாவட்ட மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் பி.பேரம்பலம், திருக்கோவில் வலயக்கல்வி அலுவலக முன்பள்ளிகளின் இணைப்பாளர் எஸ்.தர்மபாலன் ஆகியோர் விழிப்புணர்வு கருத்துக்களை முன்வைத்ததுடன் திருக்கோவில் பிரதேச சகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு இருந்தனர்.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago