Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 ஜூன் 14 , பி.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.ஜே.எம்.ஹனீபா
அம்பாறை மாவட்டத்திலுள்ள மக்கள், எமது கட்சியின் தலைமைத்துவத்திடம் விடுத்த ஏகோபித்த அழைப்புக்கு அமைவாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமது பணிகளை அம்பாறை மாவட்டத்துக்கு விஸ்தரித்தது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறைத் தொகுதி இளைஞர் அமைப்பாளர் சஹீல் ஏ காதர் தலைமையில் சம்மாந்துறையில் சனிக்கிழமை நடைபெற்ற தையல் பயிற்சி நிலையத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமைத்துவம் முஸ்லீம் சமூகத்துக்கு எங்கெல்லாம் அநீதி இழைக்கப்படுகின்றதே அங்கெல்லாம் சென்று அந்த மக்களுக்காக குரல் கொடுக்கும் சக்தியாக இன்று எமது சமூகத்தில் காணப்படுகின்றது.
எமது கட்சியின் தலைமைத்துவம் வடபுலத்திலிருந்து விரட்டப்பட்டு அகதிமுகாம்களிலும் தெருவோரங்களிலும் வாழ்ந்தார்கள். 25 வருடகாலம் துன்பங்களை அனுபவித்த மக்களுடைய துயர் துடைத்து
மக்களின் உணர்வுகளை அறிந்து செயற்படுபவர் எமது தலைவர் ரிஷாட்.
இன்று எமது மக்கள் பலதரப்பட்ட கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். கல்வி, சுகாதாரம், வாழ்விடம் போன்ற விடயங்களை சரியான முறையில் திட்டமிட்டு செயற்படுத்த வேண்டியுள்ளது.
முஸ்லீம் சமூகத்தின் தலைவர்கள் என்று தங்களை இனங்காட்டிக் கொண்டவர்கள் முஸ்லீம் சமூகம் இன்று எதிர்நோக்கியுள்ள சவால்களுக்கு முகம் கொடுக்க வக்கில்லாதவர்களாக வாய்மூடி மௌனிகளாக கதிரைகளைச் சூடாக்கி கொண்டிருக்கின்றனர்.
எமது மக்களுக்கு பிரச்சினை வரும் போது ஓடி ஒழியாமல் தலை நிமிர்ந்து சமூகத்தை பாதுகாக்ககூடிய தலைமைகளை நாம் வளர்த்தெடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago