Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஜூன் 16 , மு.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நடைமுறைகளை மீறும் வாகன சாரதிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம். ஜெமீல், இன்று செவ்வாய்க்கிழமை (16) தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிளின் பெற்றோல் தாங்கியின் மேல் இருத்தி பிள்ளைகளை கொண்டு செல்பவர்கள் மீதும் பாதுகாப்பு தலைக்கவசம் அணியாமல் செல்பவர் மீதும் இறுக்கமான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சாரதி அனுமதிப்பத்திரம் இலவ்லாதவர்களிடம் மோட்டார் சைக்கிள்களை ஓடக் கொடுக்க வேண்டாம். அத்துடன், மோட்டார் சைக்கிளில் செல்லும் பெண்கள் ஒருபக்கம் காலை வைத்து கொண்டு செல்லாமல் இரண்டு பக்கமும் காலை வைத்துக்கொண்டு செல்ல வேண்டும். உள்வீதிகள் காபட், கொங்கிறீட் வீதி போடப்பட்டுள்ளதால் உள்வீதி என்று நினைத்துக் கொண்டு பாதுகாப்பு தலை கவசமில்லலாமல் செல்ல வேண்டாம். உள்வீதியில் தான் அதிகமான விபத்துக்கள் ஏற்படும் மரணங்களும் ஏற்பட்டுள்ளது.
மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்ட வேண்டாம். வீதி சம்பந்தமான விளக்கக் குறியீடுகளை அவதானித்து வாகனங்களை செலுத்துங்கள். முச்சக்கர வண்டி சாரதிகள் பாடசாலை பிள்ளைகளை ஏற்றிச் செல்லும் போது, அதிகமான பிள்ளைகளை ஏற்றிச் செல்ல வேண்டாம். பாத சாரிகள் வீதியைக் கடக்கும் போது அருகிலுள்ள மஞ்சள் கோட்டு வீதிக் கடவையில் கடவுங்கள் எனவும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம். ஜெமீல் கேட்டுக்கொண்டார்.
தேவையற்ற வகையில் வாகன விபத்துக்களினால் அக்கரைப்பற்று பிரதேசத்தில் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனை கட்டுப்படுத்தவதற்கு பொதுமக்களும் சாரதிகளும் சட்ட திட்டங்களை கடைபிடிக்கமாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம். ஜெமீல் மேலும் தெரிவித்தார்.
8 minute ago
17 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
17 minute ago
35 minute ago