2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 800 குடும்பங்களுக்கு: நிதியுதவி

Kogilavani   / 2015 ஜூன் 16 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 800 குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த டிசெம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 800 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இக்குடும்பங்களை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காக ஹண்டிகப் இன்டர்நேர்ஷனல் நிறுவனத்தின் உடனடி செயற்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 7 குடும்பங்களுக்கு முதல்கட்ட நிதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிதியுதவி வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழi காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அரச சார்பற்ற சர்வதேச தொண்டு நிறுவனமான ஹண்டிகப் இன்டர்நேஷனல் நிறுவனம் ஐரோப்பிய ஆணைக்குழுவின் மனிதாபிமான செயலகத்தின் அனுசரணையோடு மேற்கொண்;டுள்ள  இத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் நன்மையடைந்துள்ளனர்

இந்நிறுவனத்தின் அனர்த்த அபாயங்களைக் குறைக்கும் செயற்திட்டத்தின் முகாமையாளரான ஷரண்யா ரவிகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன், ஆலையடிவேம்பு பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ரி.தனராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.  

மேலும் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு இவ்வாறான இரண்டு கொடுப்பனவுகள் குறித்த குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளதுடன், இச்செயற்திட்டத்துக்கான நடவடிக்கைகளில் ஹண்டிகப் நிறுவனத்துடன் இணைந்து ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X