Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 ஜூன் 17 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
புதிய தேர்தல் முறையில் தொகுதிகள் குறைக்கப்படுமிடத்து, பொத்துவில் தேர்தல் தொகுதியில் தமிழர் பிரதிநிதித்துவம் இழக்கக்கூடிய சாத்தியம் உள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
புதிய தேர்தல் முறை தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (16) கருத்துத் தெரிவித்தபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், 'தற்போது பொத்துவில் தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதியாக அமைந்துள்ளது. புதிய தேர்தல் முறையில் தொகுதிகள் குறைக்கப்பட்டு ஒரு தேர்தல் தொகுதியாக கொண்டுவரப்படும்போது, தமிழர்களின் பிரதிநிதித்துவம் இழந்துபோகக்கூடிய சாத்தியம் ஏற்படலாம். இருப்பினும், இது தொடர்பில் தீர்க்கமான முடிவை நாம் இப்போது கூறமுடியாதுள்ளது' என்றார்.
'புதிய தேர்தல் முறை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு கொண்டுவரும்போது, அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் பிரதிநிதித்தும் பாதுகாக்கும் வகையில் எமது கட்சி நடவடிக்கைகளை எடுக்கும். மக்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்' என அவர் தெரிவித்தார்.
11 minute ago
20 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
20 minute ago
38 minute ago