Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஜூன் 18 , மு.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.முஜாஹித், எம்.எஸ்.எம். ஹனீபா
சாய்ந்தமருது பிரதேசத்தில் திண்மக் கழிவுகள் கொட்டப்படும் பொது இடங்களை கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர், நேற்று புதன்கிழமை (17) நேரடியாக சென்று பார்வையிட்டார்.
தனக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளைத் தொடர்ந்தே கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத், உறுப்பினர்களான எம்.ஐ.எம்.பிர்தௌஸ், ஏ.நிசார்தீன், எம்.எஸ்.உமர் அலி மற்றும் அதிகாரிகள் சகிதம் முதல்வர் அப்பகுதிகளுக்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்தார்.
குறிப்பாக சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள மீனவர் நூலகம், லீடர் அஷ்ரப் வித்தியாலயம் மற்றும் சில வாடிகளுக்கு அருகாமை, வைத்தியசாலை வீதி, சாஹிராக் கல்லூரி வீதி மற்றும் நூலக வீதி ஆகிய இடங்களிலும் மக்கள் அன்றாடம் குப்பைகளைக் கொட்டுவதால் அப்பகுதிகளில் பெரும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடுகளும் ஏற்படுகின்றன.
இவற்றைக் கருத்திற்கொண்டு மக்களின் இச்செயற்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆலோசனைகளை மேற்கொண்டதுடன் அவசரமாக மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் பற்றிய அறிவுறுத்தல்களை அதிகாரிகளுக்கு வழங்கினார்.
6 minute ago
15 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
15 minute ago
33 minute ago