Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Administrator / 2015 ஜூன் 20 , மு.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்ட முகுது மகா விஹாரை திறப்பு விழாவை முன்னிட்டு, வீதிகளில் கட்டப்பட்டிருந்த பௌத்த கொடிகளில் ஒன்றை சேதப்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட நபர், பொத்துவில் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக இவ்விகாரைக்குப் பொறுப்பான விகாரதிபதியினால் பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (19) முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த முறைப்பாட்டையடுத்து, குற்றஞ்சாட்டப்பட்ட பொத்துவில் - 04, அறுகம்பை வீதியைச் சேர்ந்த சம்சுதின் ஹம்றூத்; (வயது 25) என்பவர் வெள்ளிக்கிழமை (19) மாலை பொத்துவில் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.
இந்தச் சம்பவத்துக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை எனவும் இது திட்டமிட்டு சோடிக்கப்பட்ட பொய்யான குற்றச்சாட்டு எனவும் ஹம்றூத் தெரிவித்துள்ளார்.
குறித்த நபரை பொத்துவில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.
13 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
31 minute ago