2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

சுகாதார தொண்டர்களை நிரந்தரமாக்குவதற்கு நடவடிக்கை

Gavitha   / 2015 ஜூன் 21 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

கல்முனை பிராந்திய வைத்தியசாலைகளில் 15 வருடங்களாக சுகாதார தொண்டர்களாக கடமையாற்றுபவர்களை நிரந்தரமாக்குவதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் நடவடிக்கை எடுத்துள்ளதாக, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும்; சுகாதார தொண்டர்கள் சங்கத்தின் தலைவருமான ஐ.எல்.எம். நஸீர் தெரிவித்தார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட வைத்தியசாலைகளிலும் சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்திலும் சுகாதார தொண்டர்களாக கடமையாற்றும் சுகாதார தொண்டர்கள் சங்கத்தின் மாதாந்தக்கூட்டம் (21) ஞயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை டாக்டர் ஜலால்டீன் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இதில் உரையாற்றுகையிலேயே ஐ.எம். நஸீர் இதனைத் தெரிவித்தார்.

கல்முனைப் பிராந்தியத்தில் சுமார் 140 பேர் எவ்வித கொடுப்பனவுமின்றி வைத்தியசாலைகளில் நீண்ட காலமாக கடமையாற்றி வருகின்றார்கள்.  இவர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்குவதில் கடந்த அரசாங்கங்கள் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இதனால் நாங்கள் எவ்வித வருவாயுமின்றி பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றோம்.

சுகாதார தொண்டர்களை நிரந்தரமாக்கமாறு கடந்த 16ஆம் திகதி கிழக்கு மாகாண முதலமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கைகளை விடுத்த போது, மிகவிரைவில் நிரந்தர நியமனம் வழங்குவதற்கு வாக்குறுதியளித்துள்ளார்.

இது தொடர்பாக ஜனதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதம ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு எங்களது கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னர் சுகாதார தொண்டர்களுக்கு நிரந்த நியமனம் வழங்க வேண்டும் தவறும் பட்சத்தில் உண்ணாவிரோத போராட்டத்தில் குதிக்கவுள்ளதாகவம் ஐ.எல்.எம். நஸீர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X