Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஜூலை 13 , மு.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண முஸ்லிம் அரசியலில் கட்சித்தாவல்கள் பரவலாக இடம்பெறுவதாக அரசியல் வட்டாரங்களில் தெரியவருகின்றது.
2010ஆம் ஆண்டு வன்னி மாவட்டத்திலிருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினராக நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியிருந்த முன்னாள் நாடாளுமன்ற உப்பினரான ஹுனைஸ் பாறூக் இந்தத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளராக போட்டியிடுகின்றார்.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிருந்து விலகி சில காலம் ஐக்கிய தேசிய கட்சியுடன் இவர் இணைந்திருந்தார்.
கிழக்கு மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உப்பினரான அலிஸாஹிர் மௌலானா இம்முறை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடுகின்றார்.
இவர், முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசகராகவும் கடைசியாக மஹிந்த ராஜபக்ஷவுக்காக தென் மாகாணங்களில் பிரசாரங்கள் மேற்கொண்டிருந்தார்.
அத்துடன், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிட்டு ஏறாவூர் நகர பிதாவாகவும் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராகவும் அலிஸாஹிர் மௌலானா இருந்தார்.
இதேவேளை, பொத்துவில் தொகுதி ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல் மஜீத் அக்கட்சியிலிருந்து விலகி தற்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து, அம்பாறை மாவட்ட முதன்மை வேட்பாராகப் போட்டியிடுகின்றார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிஸின் கிழக்கு மாகாண சபை குழுத் தலைவரான ஏ.எம்.ஜெமீல் அக்கட்சியிலிருந்து விலகி அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து, அம்பாறை மாவட்ட வேட்பாளராகியிருக்கின்றார்.
மேலும், அகில இலங்கை மக்கள் காங்கரஸின் கொள்கை பரப்புச் செயலாளரான எம்.எஸ்.சுபைர் அதிலிருந்து விலகி மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளராக போட்டியிடுகின்றார்.
9 hours ago
02 Oct 2025
02 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
02 Oct 2025
02 Oct 2025