2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாணசபைக்கு புதிய உறுப்பினர்

Suganthini Ratnam   / 2015 ஜூலை 14 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜே.எம்.ஹனீபா

கிழக்கு மாகாணசபையின் புதிய உறுப்பினராக ஏ.எல்.எம்.மாஹீர் நியமிக்கப்படவுள்ளார்.

கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சரான எம்.ஐ.எம்.மன்சூர்  எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதன் நிமித்தம் தனது  அமைச்சுப்பதவி மற்றும் மாகாணசபை உறுப்புரிமை என்பவற்றை இராஜினாமாச் செய்துள்ளார். இதை அடுத்தே,  ஏ.எல்.எம்.மாஹீர் கிழக்கு மாகாணசபையின் புதிய  உறுப்பினராக  தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸன் அலி, நேற்று திங்கட்கிழமை (13) தெரிவித்தார்.  

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரான ஏ.எல்.எம்.மாஹீர், இலங்கைக்கான  சவூதி அரேபிய தூதரகத்தின் பொதுசன தொடர்பு அதிகாரியாக கடமையாற்றிவந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X