Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 ஜூலை 14 , மு.ப. 09:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.ஸிறாஜ்
தற்போது இந்நாட்டில் புதியதோர் அரசியல் கலாசாரம் தோன்றியுள்ளது. நல்லாட்சியின் அத்தனை சிறப்புக்களையும் சுவைக்கின்ற தாய்நாடாக எதிர்காலத்தில் பயணிக்க இலங்கை தயாராகியுள்ளது. ஆனால், எமது பிராந்தியத்தில் மாத்திரம் இதன் பெறுபேறுகளை காணமுடியாத துர்ப்பாக்கிய நிலை தொடர்கின்றது. இதை எமது சமூகம் உணர்ந்து மாறாதவரை நாம் தலை நிமிர்ந்து வாழமுடியாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில்; சம்மாந்துறை தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத் தேர்தலில் களம் இறங்கியுள்ள கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு இன்று செவ்வாய்க்கிழமை கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், 'நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதன் பயனாக நல்லாட்சியின் சுபீட்சங்களை மக்கள் இன்று அனுபவிக்கின்றார்கள். ஆனால், எமது மண் மாத்திரம் பழைய எச்சங்களையே மீண்டும் கழுவி அலுமாரியில் அடுக்கிவைத்து அழகு பார்க்க முற்படுகிறதா என்ற கேள்வி எழுகின்றது.
இந்தக் கேள்விக்கு விடையாக நாங்கள் இந்த பிராந்திய மக்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும். அந்த வகையிலேயே, எப்போதும் சமூக நலன் சார்ந்து மக்களுடன் மக்களாக இருந்து சிந்திக்கின்ற ஒரு தலைமையோடு ஒன்றிணைந்துள்ளோம்.
இந்த இணைவு எமது பிராந்தியத்துக்கு மட்டுமல்லாமல், முழு கிழக்கிலும் அகலக் காலூன்;றுகின்ற ஒரு நேர்மையான தலைமைக்கு மக்களாகிய நீங்கள் தேசிய அங்கிகாரம் வழங்குகின்ற சந்தர்ப்பத்தை ஏற்ப்படுத்தி தந்திருக்கிறது.
சம்மாந்துறை தொகுதியானது காலாகாலமாக தனது பிரதிநிதித்துவத்தை தன்னகத்தே கொண்டிருந்த வரலாற்றை இன்று ஒரு சிலர் சுயநலத்துக்காக மாற்றியமைத்துள்ளனர். இந்த நிலை மாற வேண்டும்.
தமக்கான ஒரு அரசியல் பிரதிநிதி எமது மண்ணை பற்றி பேசுகின்ற ஒரு தலைமையை தெரிவு செய்கின்ற சந்தர்ப்பம் இன்று மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள் என்ற வேண்டுதலை மக்களுக்கு விடுக்கிறேன்' என்றார்.
9 hours ago
02 Oct 2025
02 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
02 Oct 2025
02 Oct 2025