Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 ஜூலை 16 , மு.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
தமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வை ஐக்கிய தேசியக் கட்சி ஒருபோதும் வழங்காது. இதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உணரும் காலம் வெகு தொலைவில் இல்லையென்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் திகாமடுல்ல தேர்தல் மாவட்ட வேட்பாளர் பி.எச்.பியசேன தெரிவித்தார்.
அக்கரைப்பற்றிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று புதன்கிழமை (15) ஆதரவாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், 'ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்புக்குமிடையிலான தேனிலவு ஒருபோதும் நீடிக்காது. ஐக்கிய தேசியக் கட்சியினர் துரோகம் இழைத்துள்ளதாகக் கூறி கூட்டமைப்பினர் மிக விரைவில் வெளியேறுவார்கள்' என்றார்.
தமிழ் மக்களுக்கான தீர்வு வழங்கப்படவேண்டும். ஆனால், அதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செல்லும் வழி தவறானது. எதிர்காலத்திலாவது அவர்களின் மனநிலை மாறவேண்டும்.
முப்பது வருடகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வாழ்கின்ற மக்கள் காலாகாலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்துவருகின்றனர். இருந்தபோதிலும், இந்த மக்களுக்கு த.தே.கூட்டமைப்பினரால் எதையும் பெற்றுக்கொடுக்க முடிவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்' எனவும் அவர் தெரிவித்தார்.
9 hours ago
02 Oct 2025
02 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
02 Oct 2025
02 Oct 2025