2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

வடக்கு, கிழக்கிலிருந்து 2,134 பக்தர்கள் கதிர்காமத்துக்கு பாதயாத்திரை

George   / 2015 ஜூலை 16 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

கதிர்காமம் வருடாந்த ஆடி உற்சவம், வெள்ளிக்கிழமை(17) ஆரம்பமாவதுடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து பாதயாத்திரையாக 2,134 பக்தர்கள் கதிர்காமத்தை சென்றடைந்துள்ளனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் பாத யாத்திரையை ஆரம்பித்த யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை, திருக்கோவில், காரைதீவு, அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களே இவ்வாறு கதிர்காமத்தை சென்றடைந்துள்ளனர்.
 
கதிர்காமம் சென்றடைந்து ஆலய வளாகத்தில் தங்கியுள்ள பக்தர்களுக்கு தேவையான வசதிகளை, கதிர்காம தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே டி.பி.குமாரகே வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X