2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

த.தே.கூ. வை வாக்குகளினால் பலப்படுத்தவேண்டும்

Suganthini Ratnam   / 2015 ஜூலை 20 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வாக்குகளினால் பலப்படுத்துவதன் மூலம் புரையோடிப்போயுள்ள தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வை பெறமுடியுமென்று கூட்டமைப்பின் சார்;பில் போட்டியிடும் அம்பாறை மாவட்ட வேட்பாளர் எம்.குணசேகரம் சங்கர் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 'சலுகை அரசியல், நல்லெண்ண அரசியல், இணக்க அரசியல் ஆகியன தமிழ் மக்களை ஏமாற்றும் பசப்பு வார்த்தைகள். இவை கடந்தகால அரசியல் வரலாறுகளில் நாம் கண்டு சலித்துப்போன விடயங்கள்' என்றார்.  

'மேலும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் உலக நாடுகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் அழுத்தம் கொடுக்கக்கூடிய சக்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே உண்டு.

ஓர் இனம் தன்னைத்தானே ஆள்வதற்கும் தன்னைத்தானே வழிநடத்தி அந்த இனத்தின் மொழி, கலை, கலாசாரம் மற்றும் நிலங்களை எல்லைகளாகக் கொண்ட ஓர்  இனத்தின் இருப்பை நிலை நிறுத்தக்கூடிய அடிப்படையான  விடயங்களை பெற்றுக்கொள்ளும் வகையில், தமிழ் மக்கள் இந்தத் தேர்தலை ஒரு மாற்றத்தின் சக்தியாக கொண்டு தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பை பலமிக்க சக்தியாக மாற்றவேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X