2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

தற்போது தொற்றா நோய்கள் அதிகரிப்பு: அஹிலன்

Suganthini Ratnam   / 2015 ஜூலை 22 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது, தற்போது  தொற்றா நோய்கள் அதிகரித்துவருவதாக அம்பாறை பொது வைத்தியசாலையின் அவசர சத்திர சிகிச்சைப் பிரிவு வைத்திய அதிகாரி என்.அஹிலன் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

தொற்றா நோய்கள் சம்பந்தமான விழிப்புணர்வூட்டும்  நிகழ்ச்சித் திட்டத்தை  அம்பாறையில் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 'தொற்றா நோய்களானது தனிப்பட்ட ஒருவருடைய வாழ்க்கை நிலைமை, நடத்தை, உணவுப் பழக்கவழக்கங்கள், சுற்றுப்புறச்சூழல் ஆகியவற்றின் காரணமாக ஏற்படக்கூடியதாகும். நீரிழிவு, இருதயநோய், உயர் இரத்த அழுத்தம், சிறுநீரகநோய்;, புற்றுநோய் ஆகியவை தொற்றா நோய்களில் அடங்குகின்றன' என்றார்.  

'தொற்றா நோய்களை தடுப்பதற்கு உடற்பயிற்சி மிக முக்கியமென்பதுடன், இரு பாலாரும் வயது வித்தியாசமின்றி தினமும் உடற்பயிற்சி செய்தல் சிறந்தது.  மேலும், நோய்; வந்த பின்னர் சிகிச்சை பெறுவதை விட, வரும் முன் காப்பதே சிறந்தது' எனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X