Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 ஜூலை 23 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
தேசிய காங்கிரஸ் ஒருபோதும் சந்தர்ப்பவாத அரசியலை செய்யவில்லை, தூர நோக்குடன் அதன் அரசியல் பயணத்தை முன்கொண்டு செல்வதாக தேசிய காங்கிரஸின் தலைவரும் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட தலைமை வேட்பாளருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார்.
அக்கரைப்பற்றுப் பிரதேச சிவில் சமூக பிரதி நிதிகளுடனான கலந்துரையாடலும் தேர்தல் பிரகடனமும் நேற்று புதன்கிழமை (22) அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் நடைபெற்றது. இதில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
தேசிய காங்கிரஸ் கட்சி ஒருபோதும் தேர்தலில் தோற்ற வரலாறு கிடையாது. நாங்கள் சகல தேர்தல்களிளும் வெற்றி பெற்றே வருகின்றோம். இம்முறை நாங்கள் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் போட்டியிடுகின்றோம்.
வெற்றலைச் சின்னம் என்பது ஒருவருக்கு மட்டும் சொந்தமான சின்னமல்ல அது ஒரு கட்சியின் சின்னம். இதைவைத்துக் கொண்டு சிலர் அரசியல் செய்ய நினைக்கின்றார்கள்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கூடுதலான வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களை கைப்பற்றும்.
ஜக்கிய தேசிக் கட்சி அரசாங்கத்தினால், வடகிழக்கு இணைப்பு பயங்கரவாதம் உருவாக்கப்பட்டமை இதன் மூலம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டது, ஜனாதிபதி மைத்திரியின் அரசாங்கத்தில் மீண்டும் பயங்கரவாதத்தை உருவாக்குவதற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்படுகின்றார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் அப்போதைய சூழலில் தேசிய காங்கிரஸ் தனது அரசியல் யூகத்தை நடுநிலைப்படுத்தி சுதந்தரக் கூட்டமைப்பு பிழவுப்படக் கூடாது என்பதற்காக தனது அரசியல் பயணத்தை மேற்கொண்டது.
நாட்டில் மீண்டும் ஜக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் வரக் கூடாது என்ற நிலைப்பாட்டில் தேசிய காங்கிரஸ் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.
தேசிய காங்கிரஸ் தமது அரசியல் அதிகாரங்களை சிறு கிராமங்களுக்கும் வழங்க வேண்டுமென்பதற்காக பொத்துவில், இறக்காமம் ஆகிய பிரதேசங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம். எனவே எதிர்வரும் தேர்தலில் எமது வேட்பாளர்களுக்கு கூடுதலாக வாக்களித்து ஆட்சியின் பங்காளர்களாக நாமும் ஒன்று சேர்வதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
7 hours ago
9 hours ago
02 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
02 Oct 2025