Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 ஜூலை 29 , மு.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-.ரீ.கே.றஹ்மத்துல்லா, எஸ்.கார்த்திகேசு
தற்போது நிலவுகின்ற வரட்சி காரணமாக அம்பாறை மாவட்ட மேய்ச்சல்தரைகளிலுள்ள புல், பூண்டுகள் கருகுவதனால் பசுமாடுகளுக்கு உணவை வழங்குவதில் சிரமங்களை எதிர்நோக்குவதாக கால்நடைப் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கால்நடை வளர்ப்பு, பால் விற்பனையின் மூலம் தங்களுக்கு கிடைக்கும் வருமானம் பாதிக்கப்படுகின்றது.
இதனால், தொழில் அபாயத்தை தாங்கள் எதிர்நோக்குவதுடன், வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதாகவும் கால்நடைப் பண்ணையாளர்கள் கூறினர்.
எனவே, இப்பிரச்சினையை தீர்க்கும் நோக்கில் கால்நடை வளர்ப்புக்கான மேய்ச்சல்தரையை வர்த்தமானி மூலம் அறிவித்து, தங்களின் தொழிலை மேற்கொள்வதற்கான நடவடிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்கவேண்டும் என்று கால்நடைப் பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் அம்பாறை மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.நதீரிடம் நேற்று செவ்வாய்க்கிழமை கேட்டபோது, 'அம்பாறை மாவட்டத்தில் சுமார் ஒரு இலட்சம் பசுமாடுகள் வளர்க்கப்படுகின்றன. தற்போதைய சனத்தொகைப் பெருக்கம் மற்றும் விவசாய நடவடிக்கை காரணமாக கால்நடைப் பண்ணையாளர்கள் பசுக்களுக்கு வேண்டிய உணவை வழங்குவதில் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்' எனவும் தெரிவித்தார்.
'மேலும், பாரம்பரிய முறையில் குறைந்த பால் உற்பத்தி கிடைக்கக்கூடிய பசு இனங்களை பட்டியாக வளர்ப்பதே இவ்வாறான பிரச்சினைக்கு காரணமாகும். பசுக்களுக்கான உணவுத் தட்டுப்பாட்டை மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட பண்ணையாளர்களும் எதிர்நோக்குகின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் மேய்ச்சல்தரை இல்லாத பிரச்சினை தொடர்பில் நீண்டகாலமாக தெரிவிக்கப்படுகின்றது. வனபரிபாலன திணைக்களம், விவசாயத்திணைக்களம் ஆகியன இணைந்து இதற்கான நடவடிக்கையை எடுக்கவேண்டும்' எனவும் அவர் கூறினார்.
5 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago