Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 05 , மு.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹூஸைன்
தேர்தல் சட்ட விதிகளை மீறும் வகையில் தேர்தல் பிரசுரங்களை வாகனத்தில் கொண்டுசென்ற மற்றும் தேர்தல் பிரசுரங்களை விநியோகித்த குற்றச்சாட்டுக்களின் பேரில் மூன்று பேர் அம்பாறை மாவட்டத்தில் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த வகையில், தேர்தல் சட்ட விதிகளை மீறும் வகையில் தேர்தல் பிரசுரங்களை வாகனத்தில் கொண்டுசென்ற குற்றச்சாட்டின் பேரில் வாகன சாரதியும் உதவியாளரும் சாய்ந்தமருது நகரில் நேற்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டனர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அன்வர் முஸ்தபா என்பவரின் நூற்றுக்கணக்கான பிரசுரங்கள் மற்றும் வேட்பாளரின் படத்துடன் கூடிய அட்டைகளுடன்; வாகனமும் கைப்பற்றப்பட்டன.
பிரசுரங்களுக்குரிய வேட்பாளர் இல்லாத நிலையில் சட்டவிரோதமாக மேற்படி பிரசுரங்களை தன்வசம் வைத்திருந்தமை, அவற்றை எடுத்துச் சென்றமை, தேர்தல் சட்ட விதிகளை மீறும் வகையில் நடந்துகொண்டமை ஆகிய குற்றச்சாட்டுக்களை இவர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ளதாக கல்முனைப் பொலிஸார் கூறினர்.
இது இவ்வாறிருக்க,தேர்தல் சட்ட விதிகளை மீறும் வகையில் தேர்தல் பிரசுரங்களை விநியோகித்த குற்றச்சாட்டின் பேரில் 48 வயதுடைய ஒருவர் கல்முனை வைத்து திங்கட்கிழமை (03) மாலை கைதுசெய்யப்பட்டார்.
தமிழரசுக் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் ஒன்பதாம் இலக்க வேட்பாளர் வைரமுத்து அருளம்பலம் என்ற வேட்பாளரின் 105 பிரசுரங்களை வைத்திருந்து கல்முனை ஐஸ் வாடியடியில் பொதுமக்களுக்கு இந்த சந்தேக நபர் விநியோகித்துக் கொண்டிருந்ததாகவும் இதன்போதே இவரை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.
பிரசுரங்களுக்குரிய வேட்பாளர் இல்லாத நிலையில் சட்டவிரோதமாக மேற்படி பிரசுரங்களை தன்வசம் வைத்திருந்தமை, அவற்றை விநியோகித்து, தேர்தல் சட்ட விதிகளை மீறும் வகையில் நடந்துகொண்டமை ஆகிய மூன்று குற்றச்சாட்டுக்கள் இவர் மீது முன்வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
4 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
7 hours ago